கவிதைகள் (?) லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கவிதைகள் (?) லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 31 ஆகஸ்ட், 2011

ஓவியம்

சிந்தையில் இருந்து சிதறிய கற்பனைத் துளி
விந்தைகள் புரியும் வண்ணங்களின் ஆவளி
ஓவியம்!

திங்கள், 22 ஆகஸ்ட், 2011

துணைவி

ஒரு கோடி ஆனந்த நினைவுகளின் குவியமே
ஒரு மின்னற்கொடி எனச் சிரிக்கும் நகையழகே
ஒரு அணைப்பில் உயிர் தீண்டும் இன்பத்தீயே
ஒரு விஷயம் கூற வேண்டும் கேட்டுவிடு!

உள்ளத்து அழகோ உள்ளிருக்கும் அன்போ
உடல் கொண்ட வடிவோ விரலோர ஸ்பரிசமோ
நிஜமாய்ச் சொல்கிறேன் நீ எனை வென்றிட்டாய்
நித்தம் உன் மடி நாடும்படி செய்திட்டாய்!

ஞாயிறு, 21 ஆகஸ்ட், 2011

கோபம்!

குறைக்கச் சொல்கிறது இலக்கணம்
குறைந்தால் மதிப்பில்லை இக்கணம்
கோபம்!

மகிழ்ச்சி

பிறர்க்குத் தருகையில் கர்ணன்
தனக்குத் தருகையில் கருமி
மகிழ்ச்சி!

ஞாயிறு, 20 பிப்ரவரி, 2011

அமாவாசை நிலவொளி!

விடிவெள்ளிக்குத் துணையாய் விடியும் வரை விளக்கெரிய
குமுத இதழ்கள் குமுதம் படித்தனவோ - கார்வண்டுக் கண்களவை
வெள்ளித் திரையில் இலயித்தனவோ யாரறிவார்!
அடுத்த மாதப் பரீட்சையோ அக்காள் மகளிடம் வாஞ்சையோ
அதரம் உதிர்த்த அழகியதோர் ராகமோ - ஒப்பற்ற அழகியுந்தன்
அறையில் கூட விளக்கெரிய நான் மட்டும் இருளில்!
அமாவாசை நிலவொளியில் அந்தரங்கமாய்ச் சொன்னதை
அகமகிழ நேரே சொல் அடுத்த கணம் அங்கிருப்பேன் - இரகசியமாய்க் காதலித்த
அல்லல் நீங்கி அருள் பெறுவேன்!

செவ்வாய், 13 ஏப்ரல், 2010

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

இறைவனைத் தொழுதும் இன்னல் வந்தும்
இனிமைக்குச் சற்றே பஞ்சம் பிறந்தும்
இருபத்தி ஐந்தை கடிகாரம் மறந்தும்
மனிதத்தின் சாரம் சற்றே மறைந்தும்
புதியதோர் ஆண்டு பிறத்தல் புத்துணர்வே
உதிக்கும் நம்பிக்கைச் சூரியனின் ஒளியுமதே!

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

சனி, 3 அக்டோபர், 2009

விஞ்ஞானம்

கபடமே அறியாத அதிகாலை பனிக்காற்றும்
தாமரை உடையணிந்த அழகியாய்ச் சித்திரைக்குளமும்
காவலுக்கு ஆயுதம் தாங்கி கருப்பனும் காளியும்
கள்ளமற்ற உள்ளங்களின் எல்லையற்ற மகிழ்ச்சியும்
ஈரறுபது நிழற்துளிகளாய் மாறி நின்று
அனுவறுத்த துளிகள் மேல் பயணமாம்
வரவேற்றுத் தனிமையறுக்கும் நாகரீகப்பெட்டி
ஒரே விலை பதினைந்தாயிரம் ரூபாய்!