செவ்வாய், 16 மார்ச், 2010

ரஹ்மான்...

அண்மையில் இங்கிலாந்தின் தேசிய தொலைக்காட்சிக்கு இசை அமைப்பாளர் ரஹ்மான் அளித்த பேட்டியைக் கண்டேன். அதில் அவர் குறிப்பிட்ட வார்த்தைகள் - "நான் இசையமைப்பாளர் ஆகும் முன் வந்த அனைத்து திரைப்படங்களிலும் டோலக் வயலின் என ஒரே மாதிரியான சலித்துப் போக வைக்கும் (monophonic எனும் பொதுவான வார்த்தையை அவர் பிரயோகித்திருந்தாலும், நான் அதை மாற்றம் சற்றும் இல்லாத, சலிக்கத்தக்க இசை என்றே புரிந்து கொள்ள நேர்ந்தது) இசை இடம்பெற்றுக் கொண்டிருந்தது. நான் மேற்கத்திய இசையை திரைப்படங்களுக்கு பிரயோகித்ததன் மூலம் திரை இசைக்கு ஒரு புது ரத்தம் பாய்ந்தது. அது வரை திரை இசையை வெறுத்து வந்த இளைஞர்கள் என் இசையைக் கேட்க ஆரம்பித்தனர்..."

ரஹ்மான் அடி எடுத்து வைக்கும் காலத்தில் கோடி கட்டிப் பறந்தது இளையராஜா அவர்கள். அவரது இசையை "ஒரே மாதிரியான" "சலிக்கத்தக்க" இசையாக எப்படி ரஹ்மானால் குறிப்பிட முடிந்தது என்று எள்ளளவும் எனக்கு விளங்கவில்லை. எத்தனை அருமையான பாடல்கள், இன்று கேட்டாலும் நெஞ்சம் உருகும் அருமையான மெட்டுக்கள் அமைத்திருக்கிறார் இசைஞானி.

தொழிலில் போட்டியாளர்களை சில நேரங்களில் கடுமையாக விமர்சிப்பது மனித இயல்பு என்று வைத்துக் கொண்டாலும், அவர் குறிப்பிட்ட வார்த்தைகளின் அர்த்தம் என்ன? இந்திய இசையைப் பற்றி சற்றும் தெரியாத மேற்கத்திய மக்கள் இதைப் பார்த்தால் என்ன நினைப்பார்கள்? இந்திய இசை அடிப்படையற்ற சலிக்கும் இசை. மேற்கத்திய இசை இல்லாத எதுவும் இனிதாக இருக்க வாய்ப்பில்லை என்ற அபர்த்தம் தானே அனைவர் மனத்திலும் எதிரொலிக்கும்? இந்தியாவின் கலாச்சாரத்தை, திறமையை முன்னிறுத்தும் ஒருவர் இது போல் குறிப்பிடுதல் என்ன நியாயம்? இது வரை தன்னடக்கம் மிக்கவர் என்று அவர் மேல் வைத்திருந்த அபிமானமும் மரியாதையும் சென்ற இடம் தெரியவில்லை!

2 கருத்துகள்:

  1. \\ இது வரை தன்னடக்கம் மிக்கவர் என்று அவர் மேல் வைத்திருந்த அபிமானமும் மரியாதையும் சென்ற இடம் தெரியவில்லை! // இதுதான் இவரின் உண்மையான முகம்!!!! ஆனால் இங்கு பலபேர்க்கு அவரின் வெளிவேசம்தான் தன்னடக்கம் மிக்கவராக காட்டுகிறது....

    பதிலளிநீக்கு
  2. விடுங்க தல, கற்பூர வாசனை இவருக்கு எங்க தெரிய போது

    பதிலளிநீக்கு