திங்கள், 23 பிப்ரவரி, 2009

யார் ஜனநாயகவாதி?

இந்த ஆண்டு ஆஸ்கார் விருது வழங்கும் விழாவில் இந்தியக்கொடி ஆங்காங்கே தென்பட்டது என்றே சொல்லலாம்... பொதுவாக மேற்கத்திய நாடுகள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தும் இந்த விழாவில், இந்த முறை இந்தியர்கள் விருதுகள் தந்து கௌரவிக்கப்பட்டது நிச்சயமாக நம் நாட்டிற்கு பெருமை என்பதில் ஐயமில்லை...

விருது பெற்ற ஒவ்வொருவருக்கும், குறிப்பாக இந்தியர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். தமிழகத்தை சேர்ந்த இசை புயல் ரஹ்மான் இந்த முறை இரண்டு விருதுகள் பெற்று இரட்டிப்பு மகிழ்ச்சி சேர்த்திருக்கிறார். அவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

ஜனநாயகவாதிக்கும் நீ இது வரை பேசியதற்கும் சம்மந்தமே இல்லை என்று நீங்கள் நினைத்தீர்களேயானால் உங்கள் எண்ணம் நூறு சதவிகிதம் சரி... நான் பேச வந்த விஷயம் ஆஸ்கார் விருதுகள் சம்மந்தப்பட்டது என்றதால் விருது பெற்றவர்களை பாராட்டி விட்டு ஆதங்கப்பகுதிக்கு வரலாம் என்றிருந்தேன். அவ்வளவே... :)

விருது வாங்கிய நம் இசை புயலுக்கு நமது மாண்புமிகு முதல்வர் தெரிவிக்கும் வாழ்த்து -

"I consider the awards won by Rahman as precious jewels in the crown of one of our own with pride. I join 100 crore Indians and six crore Tamils in showering flowers of appreciation with pure minds on this scion from a minority community"

ஒரு வாழ்த்து தெரிவிக்கப்படும் பொழுது கூட ஜாதி, மதம், இனம், சிறுபான்மை, பெரும்பான்மை என்று பிரிவினைவாத நோக்கத்தோடு வாழ்த்து கூறும் இவர் ஒரு பகுத்தறிவாளி, சீர்திருத்தவாதி, ஜனநாயகவாதி. இன்னும் ஒரு படி மேலே சென்று கூறினால் ரஹ்மான் பிறப்பினால் இஸ்லாமியர் அல்ல என்பது அனைவருக்குமே தெரிந்த ஒரு உண்மை. அப்படி இருக்கும் பொழுது அதை ஒரு தனிப்பட்ட மேற்கோளாக காட்டுவதே அர்த்தமற்றது. தமிழக மக்கள் எதை கூறினாலும் அதை கிரகித்து கொள்ளும் சக்தி உடையவர்கள் அல்ல என்றே முடிவு செய்து விட்டார் போலும். அவர் முடிவை முற்றிலுமாய் ஆமோதிப்பதை போல் நாமும் அவர் கூறும் எந்த முன்னுக்கு பின் முரணான விஷயங்களுக்கும் எதிர்ப்பு தெரிவிப்பதில்லை. மக்களின் 'எனக்கென்ன' மனப்பான்மையை புரிந்து கொண்டு அவதூறு பிரச்சாரங்களும், மதவாத அரசியலும் செய்பவன் ஜனநாயகவாதி என்று நாம் விளக்கம் எடுத்துக்கொண்டால் இன்றைய தேதிக்கு இவரை மிஞ்ச ஜனநாயகவாதி கிடையாது.

மன்னர் காலத்தில் தொடங்கி இன்று வரை நாம் நசுக்கப்படுவது பிரிவினைவாதம் எனும் மத யானையால் தான். சரித்திரம் தெரிந்திருந்தும், தார்மீகம் புரிந்திருந்தும் நாம் இந்த பிரிவினைவாதத்தை தூக்கி எரிந்து தேச முன்னேற்றத்தை நோக்கி அடியெடுத்து வைக்காததே வருத்தத்திற்குரிய விஷயம்!

2 கருத்துகள்:

  1. முழுமையாக ஆமோதிக்கிறேன் ... இவ்வளவு குறுகிய கண்ணோட்டத்துடன் இவ்வளவு பெரிய பதவி வகிக்கும் ஒருவர் பேசுவது மிகவும் அவமானத்துக்குரிய விஷயமாகும் .

    பதிலளிநீக்கு
  2. முழுமையாக ஆமோதிக்கிறேன் ... இவ்வளவு குறுகிய கண்ணோட்டத்துடன் இவ்வளவு பெரிய பதவி வகிக்கும் ஒருவர் பேசுவது மிகவும் அவமானத்துக்குரிய விஷயமாகும் .

    பதிலளிநீக்கு